‘நாங்க சொல்லும் போது நீங்க நம்பல..’ – திருச்சி சம்பவத்திற்கு பாஜக ரியாக்‌ஷன்.!

எம்.பி

வீட்டிற்கு அருகில் பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழாவில் கல்வெட்டில் சிவாவின் பெயரில்லை என்பதால், திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட திருச்சி நகரமே பரபரப்புக்குள்ளானது.

திருச்சி சிவா வீட்டிற்கு முன்பிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் தடுக்க முயன்றும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தும் ஆக்ரோசமாக மோதிக் கொண்டதால் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதையடுத்து காவல் நிலையத்தில் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதும் இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்துள்ளது. அப்போது தடுக்க வந்த பெண் காவலர் படுகாயமடைந்தார்.

காவல்துறைக்கு உள்ளே புகுந்து ஆளுங்கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘திருச்சியில் காவல் நிலையத்தில் திமுகவின் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைபெற்ற கலவரத்தில், ஒரு பெண் தலைமை காவலர் ஒருவர் படுகாயமடைந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த இரு வருடங்களாக சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வந்ததை தமிழக பாஜக தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையில், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்து வந்த நிலையில், காவல் நிலையத்திலேயே புகுந்து திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது தமிழகம் வன்முறைக்காடாகி கொண்டிருக்கிறது என்பதை தெளிவு படுத்துகிறது.

பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்த முதல்வர்!

ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் காவல் நிலையத்திலும், பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மோசமான நிலையை உருவாக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்பதோடு, இந்த கோரமான தாக்குதல் நடைபெற்றதற்கு காரணமான திமுக முக்கிய நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில், தமிழக மக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குறைந்து விடும் என்பதை காவல்துறையும், தமிழக முதல்வரும் உணரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.