பிரித்தானியாவில் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு கொடுத்த பெண் கைது!


பிரித்தானியாவில் தன்னை தானே தாக்கி கொண்டு சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை வெளியிட்ட பெண்ணுக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செய்யாத குற்றத்திற்கு தண்டனை

கம்ப்ரியனிலுள்ள பாரோ நகரில் வசிக்கும் எலினோர் வில்லியம்ஸ்(Eleanor Williams) என்ற பெண், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை துஷ்பிரோயம் செய்ததாக கூறி ஜோகர் டிரென்கவ் (jordan trengove) என்பவர் மற்றும் மேலும் இருவர்  மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனக்கு தானே சுத்தியலால் காயப்படுத்திக் கொண்டு புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளார்.

பிரித்தானியாவில் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு கொடுத்த பெண் கைது! | Eleanor Williams Victims On Impact Of False@FACEBOOK/UNPIXS

இதனைக் கண்டுகொந்தளித்த அவரது ஊர் மக்கள் அந்த நபரைக் கைது செய்ய கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் தண்டனை பெற்ற மூவரும், செய்யாத குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.

பொய்யான குற்றச்சாட்டு

இந்த நிலையில் எலினோர் வில்லியம்ஸ் சம்பவம் நடந்த போது தன்னை தானே தாக்கிக் கொள்ள சுத்தியலை ஒரு கடையில் வாங்கச் சென்றுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் கம்பரியன் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

இதன் பேரில் பொலிஸார் விசாரிக்கையில் எலினோர் வில்லியம்ஸ் பொய்யான குற்றச்சாட்டு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. நீதிமன்றம் நீதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவில் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு கொடுத்த பெண் கைது! | Eleanor Williams Victims On Impact Of False@gettyimages

துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசகராகியிருக்கும் திருமதி வுட்ஹவுஸ் கூறுகையில், ‘நான் 10 ஆண்டுகளாக எனது மன உளைச்சலுக்கு ஆளானேன், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களை முன்னோக்கி வர ஊக்குவிக்கவும் முயற்சிக்கிறேன். இது நம்மை வெகுதூரம் பின்னோக்கி அழைத்துச் செல்வது போல் உணர்கிறது. அவள் நிறைய தீங்கு விளைவித்திருக்கிறாள்’ என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு கொடுத்த பெண் கைது! | Eleanor Williams Victims On Impact Of False@PA

2012 இல் ரோச்டேல் சீர்படுத்தும் கும்பல் வழக்குகளில் தலைமை வழக்கறிஞராக இருந்த நசீர் அப்சல் கூறும்போது, ‘நீதியின் போக்கை திசை திருப்புவது மிகவும் கடுமையான குற்றமாகும், ஏனெனில் அது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சேதப்படுத்துகிறது. துஷ்பிரயோகம் செய்தாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர், அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது’ என தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.