பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் அமேஸான் சாரதி ஒருவர்.
இந்தியப் பெண் அளித்துள்ள புகார்
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர் கதகோலி தாஸ்குப்தா (Kathakoli Dasgupta). தற்போது, Freckleton என்னும் சிறிய கிராமத்தில் வாழ்ந்துவருகிறார் அவர்.
சமீபத்தில் அமேஸான் சாரதி ஒருவர் நடந்துகொண்ட விதம் குறித்து புகாரளித்துள்ளார் குப்தா.
அதாவது, பொதுவாக பொருட்கள் டெலிவரி செய்ய வரும் அமேஸான் சாரதிகள், பொருட்களை வீட்டு வாசலில் வைத்துவிட்டு, காலிங் பெல் அடிப்பார்களாம். வீட்டிலுள்ளவர்கள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்வார்களாம்.
Image: James Maloney/LancsLive
பொதுவாக, டெலிவரி செய்ய வரும் நபர்கள் வாசலில் கூட நிற்கமாட்டார்களாம்.
ஆனால், சமீபத்தில் பொருட்கள் டெலிவரி செய்யவந்த ஒரு சாரதி, நேராக கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டாராம்.
நான் இந்தியாவில் இருந்தவரை பொதுவாக அங்கு யாருமே வீட்டுக்குள் நுழையமாட்டார்கள். காலிங் பெல் அடித்துவிட்டு, வீட்டிலுள்ளவர்கள் வரும் வரை அங்கேயேதான் நிற்பார்கள் என்கிறார் குப்தா.
image: James Maloney/LancsLive
மேலும் பலர் புகார்
விடயம் என்னெவென்றால், அதே கிராமத்திலுள்ள மேலும் சிலரும் இதேபோல அமேஸான் சாரதிகள் வீட்டுக்குள் நுழைய முயல்வதாக தெரிவித்துள்ளார்கள்.
புகார்களைத் தொடர்ந்து, அமேஸான் நிறுவனம் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
image: James Maloney/LancsLive