புதுடில்லி,எழுத்தாளர் பெருமாள் முருகன், ‘பூக்குழி’ என்ற பெயரில் தமிழில் எழுதி, ‘பையர்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல், ‘புக்கர்’ பரிசு பட்டியலுக்கு தேர்வாகி உள்ளது.
இலக்கியத்துறையில் வழங்கப்படும் விருதுகளில், ‘புக்கர்’ பரிசு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்களில் சிறந்த புத்தகத்துக்கு, ‘புக்கர்’ பரிசு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், 56, ‘பூக்குழி’ என்ற நாவலை, 2016ல் தமிழில் எழுதினார். இந்த நாவல் ஆணவப் படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்டது.
இந்த நாவலை எழுத்தாளர் அனிருத்தன் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
‘பையர்’ என்ற பெயரில் இந்த ஆங்கில நாவல் வெளியானது. இது, 2023ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு பட்டியலில் தேர்வாகி உள்ளது.
இதை தவிர, பல்வேறு சர்வதேச மொழிகளில் எழுதப்பட்டு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் நாவல்களும் இந்த பட்டியலில் தேர்வாகி உள்ளன.
பரிசை வெல்லும் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு, விருதை தவிர, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement