தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று (15) ,மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் பரீட்சை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.
புகையிரத சேவை இடம்பெற்று வருவதுடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.