புதுவை அரசின் குரூப் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு புதுச்சேரி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத் துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம்பெறவில்லை.
இதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்பிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பாமகவினர் ஊர்வலமாகச் சென்று புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசும் இதுகுறித்து அறிக்கை விடுத்தது இருந்தார்
இந்நிலையில், புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு இதழில் பதிவு பெறாத குரூப் பி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை புதுச்சேரி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.