பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சாட் ஜி.பி.டி. தேடுபொறியின் புதிய பதிப்பான ஜி.பி.டி – 4-ஐ (GPT-4) ஓபன் ஏ.ஐ. (OpenAI) செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சேட் ஜிபிடியை போல் இல்லாமல், புதிய பதிப்பில் எழுத்துக்கள் மட்டுமின்றி படங்களையும் பதிவேற்றி தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய பதிப்பு மிகவும் துல்லியமாகவும், சேட் ஜிபிடிஐ விட சிக்கலான உள்ளீடுகளை தீர்க்கும் திறன்களைக் கொண்டுள்ளதாகவும் ஓபன் ஏ.ஐ. குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயனர்களால் பதிவேற்றப்படும் படங்களை அடையாளம் கண்டு அதனை விவரிக்கும் வகையிலும் புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.