சமீபத்தில், மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திருநங்கைகளுக்கான டீக்கடை குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தில், புதிதாகத் திறக்கப்பட்ட டீக்கடை, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
India’s first “Trans Tea Stall” at a railway platform.
Guwahati Railway Station pic.twitter.com/JSi8OS9VKM
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 13, 2023
அந்த டீக்கடையில் திருநங்கைகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். டீக்கடையின் பெயர்ப் பலகையில், `Trans Tea Stall’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு, `ரயில்வே பிளாட்ஃபார்மில் முதல் திருநங்கைகள் டீ ஸ்டால்’ என, அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய ரயில்களில் பயணிக்கும் போது, தேநீரை விற்பவர்கள் தேநீரை டின்களில் நிரப்பி கப்களில் ஊற்றி விற்பனை செய்யும் காட்சிகள் கண் முன் நிழலாடும். அதுதவிர ரயில் நிலையங்களில் பல ஸ்டால்களையும் பார்க்க முடியும்.
இந்த நிலையில்தான், முதன்முறையாக அசாம் மாநிலம் குவாஹாத்தி ரயில்வே நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் டீக்கடை திறக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அந்தப் பதிவை ஷேர் செய்து, “இந்தச் சிறிய முயற்சி, உங்களின் பல முற்போக்கான திட்டங்களைப் போல குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்திய ரயில்வே 8 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டு செல்கிறது. மிக முக்கியமாக, யாரையும் ஒதுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.