லேசான காய்ச்சல் நல்லது ஆய்வில் புது தகவல்| A mild fever is good, new study finds

புதுடில்லி,’லேசான காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளியேற்றுகிறது; மேலும் உடல்நலத்தை அதிகரிக்கச் செய்கிறது’ என, புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அல்பர்டா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், காய்ச்சல் தொடர்பாக புதிய ஆய்வை நடத்திஉள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

லேசான காய்ச்சல் ஏற்படும்போது, அதை அப்படியே விட்டுவிடுவது மிகச் சிறந்தது. இந்த காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளியேற்றி விடும்; உடல் அழற்சியை கட்டுப்படுத்துவதுடன், திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளையும் சீர்செய்கிறது.

மருந்துகள் எடுத்துக் கொள்வதைவிட, லேசான காய்ச்சல் இயற்கையாக உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்துகிறது.

மீன்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இருப்பினும், இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே, மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது எப்போதும் நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.