தொழிற்சங்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) இடம்பெற்ற போதிலும், வவுனியாவில் உள்ள சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் கடமைக்கு வருவதைக் காண முடிந்தது
சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து வீடு திரும்புவதையும் காணமுடிந்ததாக எமது ஊடக அதிகாரி தெரிவித்தார்.
தொலைதூரப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் பெற்றோர்களால் பாடசாலைகளுக்கு அழைத்துவரப்பட்ட போதிலும் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாததினால் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனியார் போக்குவரத்து சேவை வழமை போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Logini Sakayaraja