தமிழகத்தில் கடன் சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரண சளி இருமல் காய்ச்சல் தான் என்றாலும் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியவும் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இந்த வகை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலால் தற்போது அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் காய்ச்சல் பாதிப்பை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் நாளை (மார்ச் 16 தேதி) முதல் மார்ச் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு வாரம் முன்பாக முழு ஆண்டு தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஏப்ரல் 24ம் தேதி முதல் முதல் 30-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.