கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரைச் சேர்ந்தவர் ஆதவன். கூலித் தொழிலாளியான இவர், நெய்வேலி இந்திரா நகரில் மரவேலை செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.
இதையடுத்து, இவர் வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதவனை வழிமறைத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஆதவன் தனது வீட்டிற்கு சென்றவுடன் அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவருடைய வாகன எண்ணைக் குறிப்பிட்டு இருபது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதவன் கூலி வேலை செய்யும் தன்னால் இருபது ஆயிரம் ரூபாய் கட்ட முடியாதே என்று அவர் திணறி வந்துள்ளார். இந்த நிலையில், ஆதவன் இது தொடர்பாக கேட்ட போது, அபராத தொகையை பதிவு செயும் போது தவறாக பதிவாகி இருக்கலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் சக்ம்பவம் குறித்து புகார் மனு அளித்து, மேலதிகாரிகளின் அனுமதியோடு அந்த தகவலை திருத்திக் கொள்ளலாம் என்றுத் தெரிவித்துள்ளார்கள்.