மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், ‘‘சிஆர்பிஎப் மற்றும் எல்லை பாதுகாப்பு படை போன்ற 6 ஒன்றிய ஆயுத போலீஸ் படைகளில் மொத்தம் 10 லட்சத்து 5,520 பணியிடங்களில் உள்ளன. இவற்றில் 84,866 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜனவரி 1, 2023 நிலவரப்படி, சிஆர்பிஎப்பில் 29,283 காலியிடங்கள், பிஎஸ்எப்பில் 19,987, சிஐஎஸ்எப்பில் 19,475, எஸ்எஸ்பியில் 8,273, ஐடிபிபியில் 4,142 மற்றும் அசாம் ரைபிள்ஸில் 3,706 காலியிடங்கள் உள்ளன. கடந்த 5 மாதங்களில் சிஏபிஎப் படையில் புதிதாக 31,785 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஜனவரி 1, 2023 நிலவரப்படி, மத்திய ஆயுத போலீஸ் படைகளில் மொத்தம் 247 மருத்துவர்கள் மற்றும் 2,354 செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளன’’ என்றார்.