நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பிலும், ஈவிகேஎஸ் தரப்பிலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருமகன் ஈவேராவிற்கு பதிலாக அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 74 வயதாகிறது.
தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 60,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.