Meena: படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி வாய்ப்பு… அம்மா சொன்ன வார்த்தையால் இன்னமும் வருத்தப்படும் மீனா!

நடிகை மீனா படையப்பா படத்தில் தான் இழந்த வாய்ப்பு குறித்து பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மீனாதிரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. சிவாஜி கணேசன் முதல் ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மீனா. பின்னர் ரஜினிகாந்துடன் ஜோடியாகவே நடித்துள்ளார் மீனா. 1990 மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா, தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.
​ Meena: நடிகரின் திருமணத்தால் நொறுங்கிப்போன மீனா… அம்பலமான ரகசியம்!​
படையப்பாமீனாவின் மகளான நைனிகாவும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சுஹாசினி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் தனது க்ரஷ் குறித்து பேசிய நடிகை மீனா, சினிமாவில் தான் இழந்த வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ஒன்றுதான் படையப்பா படம். 1999ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
​ Vijay, SA Chandrasekhar: விஜய்யை படிக்கட்டில் இழுத்து சென்றார் எஸ்ஏசி… இயக்குநர் ஷங்கர் பகீர் தகவல்!​
நீலாம்பரிசிவாஜி கணேசன், லட்சுமி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ், பிரீத்தி, விஜய சாரதி, நாசர் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு வில்லியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ரஜினியே தனக்கு டஃப் கொடுத்த வில்லி என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ​ சமந்தாவுக்கு இந்த கொடுமையெல்லாம் நடந்துச்சா!​
மீனாவுக்கு வந்த வாய்ப்புஇந்நிலையில் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க மீனாவுக்குதான் முதலில் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அப்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்ததால் இதுபோன்ற நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்தால் அது தனது சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று அம்மா சொன்னதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நடிகை மீனா.
​ Vijayakanth: இறுதிச்சடங்கிற்கு பணமில்லாமல் தவித்த நடிகையின் குடும்பம்.. யாருக்கும் தெரியாமல் விஜயகாந்த் செய்த உதவி… நெகிழ்ந்த பிரபலம்!​
வருத்தப்படும் மீனாஅந்த கதாப்பாத்திரத்தை நிராகரித்ததற்காக தற்போது வரை வருத்தப்பட்டு கொண்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை மீனா. நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு வித்யா சாகர் மரணமடைந்தார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யா சாகர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
​ Samantha: அபார்ஷன் செய்தாரா சமந்தா? பிரபலத்தின் டிவிட்டால் பரபரப்பு!​
Collage Maker-15-Mar-2023-11-22-AM-9103

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.