ஒவ்வொரு கறுப்பினத்தவருக்கும் 5 மில்லியன் டொலர் இழப்பீடு! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் திட்டம்


இனவெறி மற்றும் அடிமைத்தனத்தாள் பாதிக்கப்பட்ட கறுப்பின குடியிருப்பாளர்களுக்கு 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க சான் பிரான்சிஸ்கோ திட்டமிட்டுள்ளது.

தலா 5 மில்லியன் டொலர் இழப்பீடு

அமெரிக்க நகரமான சான் பிரான்சிசோ, அடிமைத்தனம் மற்றும் இனவெறியின் கொடூரமான மரபுக்கு இழப்பீடாக ஒவ்வொரு தகுதியுள்ள கறுப்பின குடிமகனுக்கும் $5 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 168 கோடி) இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.

சான் பிரான்சிசோ நகரத்தால் நியமிக்கப்பட்ட ஒரு இழப்பீட்டுக் குழு இந்த வார தொடக்கத்தில் இந்த இழப்பீட்டை பரிந்துரை செய்தது.

அதுமட்டுமின்றி, தனிநபர் கடன், வரிச் சுமைகள் மற்றும் அடுத்த 250 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் 97,000 டொலர் ஆண்டு வருமானத்தை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொண்டது.

ஒவ்வொரு கறுப்பினத்தவருக்கும் 5 மில்லியன் டொலர் இழப்பீடு! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் திட்டம் | San Francisco 5 Million Each Black Racism SlaveryPhotograph:(The New York Times)

நடைமுறைப்படுத்த தீவிர பரிசீலனை

இந்த பரிந்துரைகளைக் சான் பிரான்சிஸ்கோ மேற்பார்வை வாரியம் கேட்டதும் ஆதரவாகக் குரல் கொடுத்தது. மேலும், இந்த முன்மொழிவை வாரியம் தீவிரமாக பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் எதிர்ப்பாளர்கள் இழப்பீட்டுத் தொழகை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கமிட்டி எவ்வாறு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்தது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, ​​இதற்கு ‘ஒரு கணித சூத்திரம் எதுவும் இல்லை’ என்று இழப்பீட்டுக் குழுவின் தலைவர் எரிக் மெக்டோனல் கூறினார்.

இந்த வரைவு முன்மொழிவு கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டது, அதன் பிறகு, 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. குழுவின் இறுதி அறிக்கை ஜூன் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு கறுப்பினத்தவருக்கும் 5 மில்லியன் டொலர் இழப்பீடு! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் திட்டம் | San Francisco 5 Million Each Black Racism SlaveryGetty Images

அமெரிக்காவில் இழப்பீடு தொடர்பான விவாதம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு, பாஸ்டன் நகர கவுன்சில் இந்த இழப்பீடு பணிக்குழுவை நியமித்தது.

சிக்கல்கள்

இந்த யோசனை காகிதத்தில் சிறப்பாகத் தோன்றினாலும், இழப்பீடு பெறுவதற்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதை குழுவால் தீர்மானிக்க முடியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் மற்றும் பொது ஆவணங்களில் குறைந்தது ஒரு தசாப்த காலமாக கறுப்பின அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கராக அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும் என்று தற்போதைய தகுதிக்கான அளவுகோல்கள் தெளிவற்றதாக உள்ளது.

மதிப்பிடப்பட்ட 50,000 கறுப்பின மக்கள் நகரத்தில் வாழ்கிறார்கள் மற்றும் ஒரு சிறிய பிரிவினருக்கு கூட இழப்பீடு வழங்குவது கருவூலத்தில் பெரும் எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

சான் பிரான்சிசோ நகரம் ஏற்கனவே 728 மில்லியன் டொலருக்கும் அதிகமான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.