சென்னை: சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் எனத் தகவல்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன். வரும் 28-ஆம் தேதி முதல் இந்த போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏ34 சிறப்பு அம்சங்கள்:
- 6.6 இன்ச் திரை அளவு
- புள் ஹெச்டி+ல் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. 48 + 8 + 5 மெகாபிக்சலை இது கொண்டுள்ளது
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ஆக்டா-கோர் சிப்செட்
- 5,000mAh பேட்டரி
- 25 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 5ஜி இணைப்பு வசதி
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் திறன்
- இந்த போனின் விலை வேரியண்ட்டை பொறுத்து மாறுகிறது. ரூ.30,999 மற்றும் ரூ.32,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏ54 சிறப்பு அம்சங்கள்
- 6.4 இன்ச் திரை அளவு
- புள் ஹெச்டி+ல் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. 50 + 12 + 5 மெகாபிக்சலை இது கொண்டுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- இந்த போனின் விலை ரூ.38,999 மற்றும் ரூ.40,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
- மற்றபடி ஏ34 மாடல் போனில் உள்ள அதே அம்சங்களை இந்த போனும் கொண்டுள்ளது
Introducing the new Galaxy A Series smartphones, #GalaxyA34 5G and #GalaxyA54 5G. Awesome 5G is for everyone. #AwesomeIsForEveryone #AmpYourAwesome #AwesomeGalaxyA #Samsung pic.twitter.com/HmoT0tEDQU
— Samsung India (@SamsungIndia) March 16, 2023