சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக அண்ணா நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் வரும் 18-ம் தேதி, 19ந்தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உந்துகுழாயுடன், மவுன்ட் – பூந்தமல்லி சாலையில் சாந்தி காலனி – டிஎல்எஃப் சந்திப்பில் உள்ள பிரதான குழாயை இணைக்கும் பணி நடக்கிறது. இதன்காரணமாக, […]