இந்தியா முழுவதும் தற்போது 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு 12. 30 மணியளவில் வழக்கம் போல பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்படும்.
இதனையடுத்து பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்த பிறகு ஏப். 25ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். மீண்டும் பள்ளிகள் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.