லண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து கிடந்த வழக்கில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த இலங்கையர்
2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 16ஆம் திகதி, அதிகாலை 6.45 மணியளவில், கிழக்கு லண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார் ரஞ்சித் (Ranjith Kankanamalage, 50) என்னும் இலங்கையர்.
முதலில் ரஞ்சித் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது.
ரஞ்சித்தின் தலையிலும் முகத்திலும் மட்டும் 12 அடிகள் விழுந்திருந்தன. மூன்று அடிகள் மண்டை ஓட்டையும் தாண்டி மூளையையே சேதப்படுத்தியிருந்தன.
தற்செயலாக சிக்கிய குற்றவாளி
ரஞ்சித் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், கிழக்கு லண்டனில், எரிக் (Erik Feld, 37) என்பவர் கடை ஒன்றின் முன் ஏதோ செய்துகொண்டிருக்க, அவர் திருட முயல்வதாக கருதிய பாதுகாவலர் அவரை அணுக, வாக்குவாதம் ஏற்பட, அங்கிருந்து சென்ற எரிக் சுத்தியல் ஒன்றுடன் திரும்பியுள்ளார்.
அந்த பாதுகாவலரை நோக்கி, வெளியே வா என சத்தமிட்டபடி எரிக் சுத்தியலை ஓங்க, பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் எரிக்.
இதற்கிடையில், ரஞ்சித் உடலில் கிடைத்த நகம் ஒன்றில் எரிக்கின் DNA கிடைக்கவே, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் அவர்.
Image: London Metropolitan Police
கொலைக்கான காரணம்?
எரிக்கின் வீட்டை பொலிசார் சோதனையிடும்போது அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. எரிக் சுத்தியலால் அடித்து கொலை செய்வதில் அதீத ஆர்வம் உடையவர் என்பது அவரது மொபைலிலுள்ள வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.
அதனால், சுத்தியலால் அடித்துக் கொல்லும் எரிக்கின் ஆசைக்கு ரஞ்சித் பலியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையில், கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் எரிக்குக்கு எதிராகவே அமைந்துள்ளன. அவர் ரஞ்சித் கொல்லப்பட்ட இடத்திலிருந்து வெளியேறி, தனது வீடு நோக்கி செல்லும் CCTV காட்சிகளும் கிடைத்துள்ளன.
ரஞ்சித் தன்னைத் தாக்க வருவதாக எண்ணி, தான் தற்காப்புக்காக அவரைத் தாக்கியதாக கூறினார் எரிக். ஆனால், ரஞ்சித்தின் தலையின் பின்பக்கத்தில் அடிகள் விழுந்துள்ளன. ஆக, யாரையாவது சுத்தியலால் தாக்கவேண்டும் என்ற எரிக்கின் ஆசைக்கு, தற்செயலாக அங்கு வந்த ரஞ்சித் பலியாகியுள்ளார் என்று கூறியுள்ளார் அரசு தரப்பு சட்டத்தரணி. வழக்கு தொடர்கிறது.
Image: Met Police