பஜாஜ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 200சிசி ஸ்போர்ட்டிவ் பைக் மாடலான பல்சர் NS200 மாடலில் கூடுதலான சில வசதிகள் இணைக்கப்பட்டு விலை ரூ.7,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாடலில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு முக்கிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் NS200
தோற்ற அமைப்பில் எவ்விதமான மாறுதலும் இல்லாமல் சில வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு மாற்றாக அப் சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஃப்யூல் லெவல் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வெளிப்படுத்தி வந்த செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கூடுதலாக இப்போது கியர் பொசிஷன் இண்டிகேட்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
NS200 பைக்கில் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm வெளிப்படுத்தும் 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பல்சர் 250 பைக்கில் இருந்து பெறப்பட்டு புதிய அலாய் வீல் முன்புறத்தில் 100/80-17 டயர் மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பைக்கின் எடை 1 கிலோ வரை குறைந்து இப்பொழுது 158 கிலோ உள்ளது.
Specs | 2023 Pulsar NS200 |
என்ஜின் | 199.5 cc |
அதிகபட்ச பவர் | 18 kW (24.5 PS) at 9750 rpm |
அதிகபட்ச டார்க் | 18.74 Nm at 8000 rpm |
கியர்பாக்ஸ் | 6 வேக மேனுவல் |
முன்புற பிரேக் | 300 mm |
பின்புற பிரேக் | 230 mm |
Kerb Weight | 158 கிலோ |
2023 பல்சர் NS200 பைக்கின் விலை ரூ. 1,47,347 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) .. முந்தைய மாடலை விட விலை ரூ. 6,600 வரை உயர்த்தப்பட்டுள்ளது.