இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அசத்தலான புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. Samsung A34 மற்றும் A54 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுக்கும் நான்கு ஆண்டுகளுக்கான OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகளுக்கான Security அப்டேட் வழங்கப்படுகிறது.
தற்போதைய இந்திய பயனர்கள் கேட்கும் அனைத்து விதமான அம்சங்களுடன் இந்த இரு சாம்சங் போன்களும் வெளியாகியுள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் 5000mAh பேட்டரி இருப்பதால் நாள் முழுக்க நாம் இதனை பயன்படுத்தலாம்.
Samsung Galaxy A34
இதன் விலை 30,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் பேஸ் மாடல் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதன் 256GB ஸ்டோரேஜ் மாடல் 32,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Awesome Lime, Awesome Graphite, Awesome Silver ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதில் 6.6 இன்ச் முழு HD+ Resolution Super AMOLED டிஸ்பிலே வசதி, Vision Booster டெக்னாலஜி இருப்பதால் வெளியிடங்களில் பயன்படுத்தும்போது சிறந்த பிரைட்னஸ் கிடைக்கும். இது ப்ரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு வசதி ஆகும்.
கேமரா வசதிகளாக 48MP OIS முக்கிய கேமரா, 8MP அல்ட்ரா வைட், 5 MP மேக்ரோ கேமரா வசதி உள்ளது. இதன் முன்பக்கம் 13MP செல்பி கேமரா வசதி மற்றும் Octa Core சிப் இதில் உள்ளது. இதில் 5000mAh பேட்டரி வசதி 25W பாஸ்ட் சார்ஜிங், IP67 ரேட்டிங், Dolby Atmos ஸ்டேரியோ ஸ்பீக்கர் வசதி, வீடியோ ஸ்டேபிளிசேஷன் வசதி உள்ளது.
Samsung Galaxy A54
இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு A34 போலவே டிசைன் கொண்டிருந்தாலும் இதன் அளவு 6.4 இன்ச் முழு HD+ டிஸ்பிலே உள்ளது. இதனுடன் 144HZ Refresh Rate உள்ளது இதன் எடை A34 ஸ்மார்ட்போனை விட 4 கிராம் அதிக எடையாக 202g கொண்டுள்ளது.
இதில் 50MP OIS கேமரா, 12 MP அல்ட்ரா வைட் கேமரா, 5 MP மேக்ரோ கேமரா உள்ளது. இதன் முன்பக்கம் 32MP செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் 5000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங், ப்ளூடூத் 5.3 போன்ற வசதிகள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் தனிப்பட்ட Exynos 1380 சிப் இடம்பெறும். இதில் 2.4GHZ CPU வசதி, Mali G68 GPU உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதிகள் கொண்டுள்ளது. இதில் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது.
இதிலும் 120HZ Refresh rate வசதி, Vision booster, Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட OneUI 5.1, Dolby Atmos ஸ்டேரியோ ஸ்பீக்கர், IP67 ரேட்டிங் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை 38,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் விலை 40,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்