சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் […]