அதிமுக துணை பொதுச் செயலாளர் பொய் தகவல்களை பேசி வருவதாகவும், அவர் இதுவரை யாரையெல்லாம் ஏமாற்றியுள்ளார் என்பதையும் ஒசூர் எம்எல்ஏ பட்டியலிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர்
, ‘‘
ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது,
பொதுமக்கள் வழங்கிய எந்த மனுவிற்கு முறையான தீர்வு வரவில்லை. ஏற்கனவே மக்களை ஏமாற்றுவதற்காக திமுக தலைவர் அந்த நாடகத்தை நடத்தினார், தற்போது இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் மனுக்களை வாங்கி வருகிறார்கள், அதற்கு என்ன தீர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தார்கள். ஆனால் எட்டு வழிச்சாலை நல்லது என பொதுப்பணித்துறை அமைச்சர் பேசிவருகிறார்.
ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னார்கள், ஆனால் மூடவில்லை’’ என குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் கேபி முனுசாமி பொய் பேசக்கூடாது என ஓசூர் திமுக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 32 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை தீர்க்கும் முகாம் கடந்த 13-ம் தேதி அமைச்சர் காந்தி பாகலூரில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் இன்று 4 வது நாட்களாக பேகேப்பள்ளி, நல்லூர், சென்னசந்திரம், சேவகானப்பள்ளி, ஈச்சங்கூர் ஆகிய பகுதிகளில் ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ‘‘நேற்று ஓசூரில் அதிமுக துணை பொது செயலாளர் கேபி முனுசாமி பேசிய வீடியோவை வாட்ஸ் அப்பில் பார்த்தேன். அவர் மூத்த அரசியல் முன்னோடி, அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும் அவர் பொய்யான தகவல்களை பதிவு செய்வது என்பது சரியாக தெரியவில்லை.
தமிழக முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாவட்டந்தோறும் பொதுமக்களிடம் கோரி்க்கை மனுக்களை வாங்கிய பிறகு, முதல்வராக பொறுப்பு ஏற்ற உடன் 100 நாட்களில் தங்களது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதே போல் ஆட்சிக்கு வந்த பிறகு, உங்கள் தொகுதியில் முதல்வர் என தனித்துறை அமைத்து மக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ரத்த சர்க்கரை கட்டுக்குள் வர வெந்தயத்தை சாப்பிடும் முறை
மக்களுக்கு இதன் மூலம் எத்தனை கோரிக்கைகள் தீர்வு காணப்பட்டது என்பது குறித்து அனைத்து விபரங்களும் உள்ளது. கேபி முனுசாமி தொகுதில் செய்த திட்டங்கள் குறித்தும் விவரங்கள் உள்ளது. அவர் கேட்டால் அதனை கொடுக்க நாங்க தயாராக இருக்கிறோம். எங்கள் முதல்வர் பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் முதல்வர் அல்ல, கேபி முனுசாமி வேண்டும் என்றால் ஏமாற்றுபவர்.
அவர் யாரை எல்லாம் ஏமாற்றினார் என்பதை தெளிவாக சொல்கிறேன், அவர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டு வெளியேறினார். அதன்பிறகு சசிகலாவை ஏமாற்றினார், பிறகு ஓபிஎஸ்சை ஏமாற்றினார். தற்போது இபிஎஸ்யிடம் உள்ளார். அங்கும் அவர் ஏமாற்றிவிட்டு வெளியே வந்துவிடுவார், அது தான் கேபி முனுசாமி. இவர் இப்படி எல்லாம் அனைவரையும் ஏமாற்றிவிட்டு, தங்கள் முதல்வரை பற்றி பேசுவது அழகு அல்ல’’ என கூறினார்.