கோவை நகைக்கடை அதிபரிடம் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்!

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் கோவை நகை கடை அதிபர் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் ஆனந்த நாராயணன் சூட்கேசில் இருந்து 2 கிலோ 750 கிராம் தங்க நகைகள மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நகை மற்றும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ஆனந்த நாராயணனை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ரயிவே போலீசார் அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.