வடமேற்கு சவூதி அரேபியாவின், அல் உலா நகரில் உள்ள வறண்ட பாலைவனத்தில் ஒட்டகப் பந்தயம் நடைபெற்றது.
மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒட்டக உரிமையாளர்களும், வளர்ப்பாளர்களும் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டகங்களுக்கு சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. ஒட்டகப் பந்தயத்தை தவிர்த்து, அல் உலா நகரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமான கலச்சார நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளும் அங்கு நடைபெற்றன.