சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 1,000 சுற்றுலா பயணிகள் மீட்பு: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி அங்குள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டன. தகவலறிந்த ராணுவம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 370 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

இதேபோல் கிழக்கு சிக்கிம் உள்ளிட்ட மலைத்தொடர்களில் சுற்றுலா பயணிகள் பலர் பனிப்பொழிவு காரணமாக சிக்கிக் கொண்டனர். தற்போது வரை 1,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ‘ஆபரேஷன் ஹிம்ராஹத்’ என்ற பெயரில் மேற்கொண்ட இந்திய ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.