சிறு பட்ஜெட்டில் தயாராகும் சரித்திர படம்

பல நூறு கோடியில் பொன்னியின் செல்வன் மாதிரியான படங்கள் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் யாத்திசை என்ற பெயரில் சிறுபட்ஜெட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியன் மன்னனுக்கும், எயினர்கள் எனப்படும் பழங்குடி கூட்டத்துக்கும் இடையே நடந்த போராட்டத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. 'நவகண்டம்' என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை பலி, தேவரடியாரின் வாழ்க்கை முறை, சிற்றரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த திருமணம் உள்ளிட்ட உறவு முறைகள் ஆகியவை குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு அவை பற்றிய காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது. என்றார்.

இந்த படத்தை வீனஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரிக்கிறார். அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்கிறார், சக்கரவர்த்தி. இசை அமைக்கிறார். புதுமுகங்கள் ஷக்தி மித்ரன், சேயோன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரகுமார், சுபத்ரா, செம்மலர் அன்னம், சமர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.