உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பயணம் செய்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் முடிந்து விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தரும் ஆயுத உதவியால் இந்த போர் நீண்டு கொண்டே செல்கிறது. பரம எதிரிகயான ரஷ்யாவிற்கு செக் வைக்க, உக்ரைனில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதால், ரஷ்யா இந்த போரை தொடங்கியது.
இது ஒரு மூன்றாம் தர போர் அல்ல. இது ரஷ்ய இறையாண்மை மற்றும் ரஷ்யர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் போர் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைன் தலைநகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென பயணம் மேற்கொண்டு, மேலும் ஆயுதங்கள் வழங்கப்படும் என கூறினார்.
இது அமைதியை விரும்பும் சீனாவிற்கும், ரஷ்யாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சமாதான பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை வரவிடாமல் தடுத்து போரை நீட்டிக்கும் அமெரிக்கா என சீனா கடுமையாக தாக்கி பேசியது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு சீனா ஆயுதம் வழங்க உள்ளதாக தகவல்கள் பரவின. அதற்கு ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கடுமையாக கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் சீனா தன்னை ஒரு நடுநிலை நாடாக சித்தரிக்க முயன்றது, ஆனால் அதன் நிலைப்பாடு சில மேற்கத்திய தலைவர்களால் நம்பகத்தன்மை இல்லாதது மற்றும் ரஷ்யாவிற்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக விமர்சிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
கண்ணாடி மாட்டுங்க time travel பண்ணுங்க
“ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், அதிபர் ஜி ஜின்பிங் மார்ச் 20 முதல் 22 வரை ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வார்” என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் புடின் கலந்து கொண்டார், மேலும் இரு தலைவர்களும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த பிராந்திய பாதுகாப்பு கூட்டத்தில் சந்தித்தனர்.
தெருவில் அம்மணமாக திரிந்த வேற்று கிரகவாசி.? – புளோரிடாவில் பதற்றம்.!
இரு தலைவர்களும் “ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முழுமையான கூட்டாண்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது பற்றி விவாதிப்பார்கள்”, சர்வதேச அரங்கில் உட்பட, “முக்கியமான இருதரப்பு ஆவணங்களில் கையெழுத்திடப்படும்” என்று ரஷ்யா கூறியுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இது உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.