இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் செவ்வாய் (14) மாலை மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளின் படையினர்களுக்கு உரையாற்றினார்.
பனாகொடை இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் இது இடம்பெற்றது.
உரையின் போது, இராணுவத் தளபதி, ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இராணுவத்தின் செயல்திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தற்போதைய செயற்பாட்டுச் சூழல் முன்வைத்துள்ள சவால்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார். பயிற்சி, திட்டமிடல் மற்றும் முன்னறிவிப்பு மூலம் அதிகபட்ச செயல்பாட்டுத் தயார்நிலையைப் பேணுமாறு இராணுவத் தளபதி அறிவுறுத்தினார்.
நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டின் ஜனநாயக செயல்முறைக்கு ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை இராணுவத் தளபதி நினைவுபடுத்தினார். மேலும் நாட்டில் உள்ள மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பல முனைகளில் தகவல்களை முன்வைத்த இராணுவத் தளபதி, அமைப்பில் பகிர்ந்தளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை தெரியப்படுத்தினார். தடைகள் இருந்தபோதிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் தற்போதைய நலன்புரி திட்டங்களைத் தொடர இராணுவம் உறுதியாக இருப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்டபிள்யூபீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.