புடினுக்கு எதிரான கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றத்தின் ”வரலாற்று தீர்ப்பு” ஜெலென்ஸ்கி பாராட்டு!


ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பது ”வரலாற்று தீர்ப்பு” என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.


புடினுக்கு கைது வாரண்ட்

உக்ரைன் போரில் ரஷ்யா வேண்டுமென்றே  கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை செய்து வருவதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்த அறிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டி, புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

புடினுக்கு எதிரான கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றத்தின் ”வரலாற்று தீர்ப்பு” ஜெலென்ஸ்கி பாராட்டு! | Zelensky Hails Courts Arrest Warrant Against PutinKremlin Pool Photo via AP

மேலும் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர் குற்றத்திற்கும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்ய கூட்டமைப்பிற்கு குழந்தைகளை மாற்றியதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதே போல ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையரான மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவை கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜெலென்ஸ்கி பாராட்டு

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ”வரலாற்று தீர்மானம், இதில் இருந்து வரலாற்று பொறுப்பு தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.