ரஷ்யா – உக்ரைன் போர்: போலாந்தை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடு!


உக்ரைனுக்கு 13 MIG-29 போர் விமானங்களை அனுப்ப ஸ்லோவாக் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என பிரதமர் எட்வார்ட் ஹெகர் (Eduard Heger) தெரிவித்துள்ளார்.

போர் விமானங்கள்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி வருகிறது.

கடந்த 16-ஆம் திகதி போலந்து அரசு சில போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியது.

ரஷ்யா - உக்ரைன் போர்: போலாந்தை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடு! | Ukraine Updates Slovakia To Send Mig@Twitter

இதனை தொடர்ந்து ஸ்லோவாக்கியா (Slovakia) நாடு MIG-29 ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

ஸ்லோவாக்கிய நாட்டில் MiG-29 விமானங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.

மேலும் அவற்றில் பெரும்பாலானவை செயல்பாட்டு நிலையில் இல்லை.

இதில் செயல்பாட்டிலுள்ள விமானங்களை மட்டும் அந்நாட்டு அரசு உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. மீதமுள்ள விமானங்கள் உதிரிப் பாகங்களுக்கு செல்லும் என தெரிவித்துள்ளது.

உதவ முன்வரும் நாடுகள்

கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, முன்னாள் கம்யூனிஸ்ட் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் போரில் உக்ரைனுக்கு ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்: போலாந்தை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடு! | Ukraine Updates Slovakia To Send Mig@REUTERS

போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் விமானங்களை உக்ரைனுக்கு ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

ஆனால் இந்த உதவியை அந்நாடுகள் சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக மட்டுமே செய்கிறது. மற்ற நாடுகளும் தங்கள் இராணுவ விமானங்களைப் பகிர்ந்து கொள்ளுமா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போர்: போலாந்தை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடு! | Ukraine Updates Slovakia To Send Mig@belga

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின்(NATO) உறுப்பினர் அல்லாத உக்ரைனுக்கு இராணுவ போர் விமானங்களை வழங்கலாமா என்ற விவாதம் கடந்த ஆண்டு தொடங்கியது, ஆனால் NATO அமைப்பிலுள்ள நாடுகள் போரில் கூட்டணியின் பங்கை அதிகரிப்பது குறித்த கவலையை காரணம் காட்டி மறுத்துள்ளனர்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.