லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். சொல்லப்போனால் கோலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மவுசு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் சல்மான் கான் வரை அனைவரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இவ்வாறு பரபரப்பாக இருக்கும் லோகேஷ் தற்போது லியோ திரைப்படத்தில் தளபதியை இயக்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
மிஸ்கின்
பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா இப்படத்தின் மூலம் விஜய்யுடன் இணைகிறார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இதில் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனனின் போர்ஷன்ஸ் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்கி சில நாட்களே ஆன நிலையில் இவர்களின் பகுதி நிறைவடைந்ததாக அவர்களே அறிவித்தனர்.
Samantha: சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா ?இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!
இதனால் இவர்கள் லியோ படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் வருவார்களோ என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர் லோகேஷ் வேகமாக படப்பிடிப்பை முடிக்கக்கூடியவர், எனவே குறுகிய காலகட்டத்தில் பல காட்சிகளை எடுத்து முடித்திருப்பார் என்கின்றனர்.
சஞ்சய் தத்
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி சஞ்சய் தத்தின் காஷ்மீர் பகுதி நிறைவடைந்துள்ளதாம். இதை கேட்டு ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனென்றால் சஞ்சய் தத் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் தான் கலந்துகொண்டார். எனவே அதுக்குள் அவரின் பகுதி நிறைவடைந்ததாக வந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் சிலர் குழம்பி வருகின்றனர்.
ஆனால் அவரின் காஷ்மீர் பகுதி மட்டுமே தான் முடிந்துள்ளது என்றும், சென்னையில் நடக்கும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வந்ததால் ரசிகர்கள் ரிலாக்ஸ் ஆகினர். இந்நிலையில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களின் மீதே கவனம் இருக்கும், கதை அவர்களை முன்னிறுத்தியே மற்றவர்களுக்கு அந்த அளவில் முக்கியத்தும் இல்லாமல் இருக்கும்.
எனவே இதைப்போல லியோ படமும் ஆகிவிடக்கூடாது என ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் விக்ரம் போல படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும் சிலர் லியோ படப்பிடிப்பில் நடப்பதை பார்த்தல் இப்படமும் ஒன் மென் ஷோவாக மட்டுமே இருக்குமோ என எண்ணி வருகின்றனர். ஆனால் இது முழுக்க முழுக்க லோகேஷின் படமாகவே உருவாக்கி வருவதாக அவரே கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.