Simbu: ஆண்டவர் படத்துக்கான லுக்கா.? தீயாய் இருக்கே: வெறித்தனம் காட்டும் சிம்பு.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் சிம்புவிற்கான தரமான கம்பேக்காக அமைந்தது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிதானமாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சிம்புவின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

சிம்பு நடிப்பில் கடந்தாண்டு ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் நல்ல வசூலை அள்ளியது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடந்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கன்னடத்தில் வெளியான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘பத்து தல’ உருவாகியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த தாதா கெட்டப்பில் தமிழில் சிம்பு நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கெளதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் கதாபாத்திரம் குறைவாகவே இருந்தது. தமிழில் சிம்பு படத்தின் மீது காட்டிய ஆர்வத்தால் அவரது கதாபாத்திரத்திற்கான காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளார் இயக்குனர். இந்தப்படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக்குடன் மனுஷ்யபுத்திரன், கலையரசன், டிஜே, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Kannai Nambathey: த்ரில்லர் கதையில் ஜெயித்தாரா உதயண்ணா.?: ‘கண்ணை நம்பாதே’ பட விமர்சனம்.!

இந்நிலையில் அடுத்ததாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இணையத்தில் கலக்கியது. உலகநாயகனின் ராஜ்கமல் பட நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் சிம்பு 48 படம் உருவாகவுள்ளது.

ஒரே போன் கால்.. ரூ. 45 லட்சம் செலவு செய்து உயிரை காப்பாற்றிய மெஹா சூப்பர் ஸ்டார்: பொன்னம்பலம் உருக்கம்.!

இந்நிலையில் ‘பத்து தல’ படத்திற்காக உடல் எடையை கூட்டிய சிம்பு தற்போது மீண்டும் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மாறியுள்ளார். நியூ ஹேர்ஸ்டைலுடன், ட்ரிம் செய்யப்பட தாடியுடன் செம்ம ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறியுள்ளார். அவரின் லேட்டஸ்ட் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிங்கு பெரியசாமி படத்திற்காக அவர் இந்த லுக்கிற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பத்து தல’ படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.