அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. நாளை மாலை 3 மணியுடன் மனுத்தாக்கள் நிறைவடைய உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு வரும் 26 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட இன்று காலை எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.
அதே சமயத்தில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தொடர்ந்துள்ள வழக்கு நாளை காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில், 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது.