திருவள்ளூர்: அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தமிழக பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற அமைச்சர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் ஒரேஒரு சங்கத்தினர் மட்டும் என்னைசந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
2 மாதங்களுக்கு முன் உயர்வு: 2 மாதங்களுக்கு முன்புதான், பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தி கொடுக்கப்பட்டது. மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது குறித்து முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் ஆவின்நிறுவனத்துக்கு பால் அனுப்பமாட்டோம் என தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் அதிமுகவின் தூண்டுதலால் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல்ஆவினுக்கு பால் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக் கிறது.
சீரான முறையில் விநியோகம்: ஆகவே, ஒரு நாளைக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் சீரான முறையில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.