சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை காலை விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்து எடப்பாடி தரப்பு அவசரம் அவசரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு […]