சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.