கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்திய இரு ராணுவ விமானிகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் விருதுகளை வழங்கினார்.
ரஷ்யா – உக்ரைன் எல்லை அருகே அமெரிக்காவின் டிரோனை ரஷ்யப் போர் விமானம் அழித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும், சர்வதேச வான்வெளியில் உளவு டிரோனை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்த வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது விபத்தை ஏற்படுத்தவில்லை என்று ரஷ்யா மறுத்துவரும் நிலையில், அமெரிக்க ட்ரோனை இடைமறித்ததாக இரு விமானிகளுக்கு ரஷ்ய அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.