எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி, சுயநலவாதியாக அதிமுக பொதுக்குழு கூட்டங்களை கூட்டி அவருக்கு சாதகமாக பதவியை பறித்துக்கொண்டார் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர்.
எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டி பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி இடைக்காலப் பொதுச் செயலாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டார்,
இதனை எதிர்த்து வைத்தியலிங்கம் ஜே .சி..டி.பிரபாகரன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார்கள். இவர்கள் தரப்பு வழக்கறிஞர் சட்ட விதிகளை மீறி ,தன்னிச்சையாக தங்களை நீக்கியது ஏன் என கேள்வி எழுப்பினார்.அதாவது குற்றச்சாட்டு அறிக்கையும் தரவில்லை நோட்டீசும் கொடுக்கவில்லை .மேலும் கட்சியிலிருந்து நீக்கும் முன்பாக சஸ்பெண்ட் மட்டுமே செய்ய முடியும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் பொதுக்குழு பரிந்துரை தான் செய்ய முடியும். எனவே ஜுலை 11-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மனோஜ் பாண்டியன் தரப்பு வழக்கறிஞர் சலீம் தேர்தல் ஆணையம் இன்னும் பொதுச் செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்காத வரை ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிப்பதாக தெரிவித்தார். அவர் இது குறித்து சபாநாயகருக்கு அறிவித்துவிட்டதாகவும் ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி ஜூலை 11-ம் தேதி தீர்மானங்களுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும் எதிர்தரப்பு விவாதங்களை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் பொதுக்குழு அதிகாரத்தைபயன்படுத்தியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 11 -ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .