மலாவி நாட்டில் Freddy சூறாவளியால் தனது குடும்பத்தை இழந்த நபர் வேதனையுடன் கூறிய விடயம் சோகத்தை ஏற்படுத்தியது.
Freddy சூறாவளி
ஆப்பிரிக்க நாடான மலாவியில் Freddy புரட்டிப்போட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
இந்த மோசமான சூறாவளியால் ரிச்சர்ட் கலேட்டா என்ற நபர் தனது மனைவி மற்றும் பிள்ளையை இழந்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் இருவரையும் தானே அடக்கம் செய்தார். அதன் பின்னர் பேசிய அவர் தனது சோகத்தை வெளிப்படுத்தினார்.
சோகத்தை வெளிப்படுத்திய நபர்
ரிச்சர்ட் கலேட்டா கூறுகையில், ‘நான் அவர்களுக்காக கடினமாக உழைத்தேன், இப்போது அவர்கள் இல்லாததால், என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
கடைசியாக நான் என் மனைவியிடம் சொன்னது என்னவென்றால், அவளுடைய பெற்றோரைப் பார்க்க செல்ல இந்த வாரம் சென்று, அவளுடைய பணத்தைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான். ஆனால் இப்போது நான் அவர்களைப் போய் சந்தித்து கெட்ட செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என வேதனையுடன் கூறியுள்ளார்.
உள்ளூர் தொடக்க பாடசாலையில் அமைப்பட்ட தற்காலிக முகாமில் ரிச்சர்ட் கலேட்டா தற்போது வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Reuters