மேற்கு லண்டனை சேர்ந்த 72 வயது நபர் திடீரென்று காணமல் போயுள்ள நிலையில், ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லை என மொத்த குடும்பமும் கவலை தெரிவித்துள்ளது.
எந்த தகவலும் இல்லை
மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோ பகுதியில், தமது குடியிருப்பில் கடைசியாக காணப்பட்டுள்ளார் 72 வயதான ஷாஃபி முகமது.
ஆனால் மார்ச் 10ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது மருமகள் 33 வயதான லினா கிண்டா கவலை தெரிவித்துள்ளார்.
Image: Lina Khinda
இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பது தங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக ஷாஃபியின் மொத்த குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.
அவரது வயது, மட்டுமின்றி, இப்படியான ஒரு சூழலில் அவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பதே தங்களுக்கு கவலை ஏற்படுத்துவதாக லினா கிண்டா தெரிவித்துள்ளார்.
பொதுவாக குடியிருப்பில் இருந்து வெளியே சென்றால், எங்கு செல்கிறோம் என்பதை தெரியப்படுத்திவிட்டு செல்வார் எனவும், ஆனால் தற்போது அப்படியான எதுவும் நடக்கவில்லை என்பதுடன், அவரது அலைபேசியும் தொடர்பில் இல்லை என தெரிவித்துள்ளனர்.
பலமுறை நிலைகுலைந்து விழுந்துள்ளார்
72 வயதான ஷாஃபி இருதயம் தொடர்பான பிரச்சனைகள் கொண்டவர் எனவும் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்படுபவர் எனவும், இதனால் பலமுறை நிலைகுலைந்து விழுந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Image: Lina Khinda
அப்படியான ஒரு சூழலில் தற்போது ஷாஃபி சிக்கியிருக்கலாம் எனவும் உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிய வம்சாவளி பிரித்தானியரான ஷாஃபி 5 அடி 9 அங்குலம் உயரமும், 60 கிலோ எடையும் கொண்டவர் எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி ஷாபி மாயமான விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், லண்டனில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் தாங்கள் சென்று விசாரித்துள்ளதாகவும், உள்ளூரில் விளம்பரமும் செய்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
ஷாஃபிக்கு மனைவி பிள்ளைகள் என எவரும் இல்லை என்பதால், ரத்த சொந்தங்களே தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.