இம்ரான்கான் வீட்டின் கதவை உடைத்து புகுந்த போலீஸ்: கைது செய்ய தீவிரம்| Police who broke the door of Imran Khans house: serious to arrest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டின் கதவை போலீசார் உடைத்து புகுந்தனர். இவர் இன்று கைது செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

latest tamil news

பிரதமராக இருந்த போது பரிசுகள் மூலம் கிடைத்த வருவாயை கணக்கு காட்டவில்லை என்ற வழக்கில், இம்ரான்கான் மீது கைது வாரண்ட் பிறபிக்கப்பட்ட நிலையில் அவரது லாகூர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது இம்ரான்கான் வீட்டின் கதவை போலீசார் உடைத்து புகுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

latest tamil news

இது குறித்து இம்ரான்கான் கூறுகையில்,

லாகூர் வீட்டில் தனது மனைவி தனியே இருந்த போது போலீஸ் அத்துமீறி உள்ளே புகுந்துள்ளனர். எனது வீட்டின் மீது எந்த சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்தப்பட்டது?. என் மீது கொலை முயற்சி தாக்குதலில் போலீசார் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம்

பரிசு பொருட்கள் வாங்கி, விற்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கான் லாகூரில் உள்ள ஜமன் பூங்கா இல்லத்தில் இருந்து, இஸ்லாமாபாத்துக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக கூடவே வாகனங்களும் சென்றன. அவரது வருகையை முன்னிட்டு இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் முன்பே பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூடுதல் செஷன் நீதிபதி ஜாபர் இக்பால் முன் இம்ரான் கான் ஆஜராக சென்றார்.

latest tamil news

அப்போது செல்லும் வழியில் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனத்தில் ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதனால் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இம்ரான் கான் ஒன்பது வழக்குகளில் லாகூர் ஐகோர்ட்டிடம் இருந்து பாதுகாப்பு ஜாமின் பெற்று உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.