ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் பிரபல யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிடும் வீடியோக்கள் தினமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் தமிழ் யூடியூபின் பிரபல நெறியாளர்கள் அரசியல் கட்சியினரிடம் பணம் பெறுவது, சரக்கு அடிப்பது, கிப்ட் பொருட்களை வாங்கி வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஒரு அரசியல் பிரமுகர் பற்றியோ அல்லது கட்சியை பற்றியோ மக்களிடம் நெகட்டிவான பிம்பத்தை ஏற்படுத்த இன்னொரு கட்சியிடம் இருந்து பணம் வாங்கி ஒப்பந்தம் செய்வதும் அதில் இடம்பெற்றது. குறிப்பாக இந்த வலையில் சிக்கிய பிரபல நெறியாளர் ஐயப்பன் ராமசாமி அந்த வீடியோவில், பெண்களை பற்றி பேசி கடுமையான விமர்சனங்களை பற்று வருகிறார். ஐயப்பன் கூறியதாவது; ” எனக்கு ட்விட்டர் விட இன்ஸ்ட்டாகிராமில் தான் டீனேஜ் பெண்கள் பாலோவர்ஸ் அதிகமாக உள்ளனர். அதனால்தான் எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அட்மினிடம் கொடுக்காமல் நானே பார்த்து வருகிறேன். அட்மினிடம் கொடுத்துவிட்டால் அவனே மொத்தத்தையும் சாப்பிடுவான்” என்று கூறி சிரித்தது அவரது ஆதரவாளர்களை கடுப்பாக்கியுள்ளது.
மேலும், பெண்களை பற்றி இழிவாக பேசும் அய்யப்பன் ராமசாமி சோசியல் மீடியாவில் என்னென்ன சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிய வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், ஐயப்பன் ராமசாமி ஒரு பெண்ணிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளில் பேசி மேல் சட்டை அணியாமல் புகைப்படத்தை அனுப்பியுள்ள மெசேஜ் ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகியுள்ளது.
piyush manush fb post
சுற்றுசூழல் மற்றும் சமூக ஆர்வலரான பியூஷ் மானுஷ்தான் அந்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஐயப்பன் ராமசாமியுடன் மெசேஜ் செய்த பெண்ணின் பெயரையும் ஆதாரமாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பரில் பைக் ரைடரான அந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகமாகியுள்ளார் ஐயப்பன் ராமசாமி. பிறகு அதே பெண்ணுடன் பைக் ரைடு பற்றி பேச தொடங்கிய அவர் ஊட்டியில் இருந்து கூர்க்கிற்கு செல்ல எத்தனை நாட்கள் ஆகும் என்றும் நாம் இருவரும் போகலாமா என்றும் கேட்கிறார். அதற்கு அந்த பெண், நான் மட்டும் வர முடியாது என்னுடய நண்பர்களும் வருவார்கள் என பதிலளிக்கிறார்.
அதற்கு ஐயப்பன் ராமசாமி, எனக்கு உங்களை மட்டும்தான் தெரியும் நான் உங்களோட மட்டும்தான் இருப்பேன் என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண், நான் டபுள் ப்ரைடு பண்ணது இல்லை என்று கூற, ஒரு பைக்கில் இருவரும் செல்லலாம் என்றும் நான் பைக் எடுத்து வரவா அல்லது நீங்கள் எடுத்து வாங்க என்று ஐயப்பன் ராமசாமி இப்படி பேசிக்கொண்டிருக்க திடீரென சட்டை இல்லாமல் எடுத்த படத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை கேட்டபோது ஆத்திரமடைந்த அந்த பெண்” நீ சொல்வதை எல்லாம் செய்வேன் என்று நினைத்துவிட்டாயா? இழுத்து வெச்சி வெட்டி போட்டுட்டு என் வேலைய பார்த்துட்டு போகிறவ மாதிரி இல்லையா நானு? மனுஷன் நெனச்சி உன்கூட பேசுனா போட்டோ அனுப்புனு சொல்ற.. இவ்வளோ நாளு நீ கட்டி காப்பாத்திய இமேஜை இந்த ஸ்கிரீஷ் ஷாட்டு மூலம் அசிங்க படுத்தப்போறேன் என்று அந்த அப்பெண் கண்டித்தார்.
அதற்கு ஐயப்பன் ராமசாமி மன்னித்துவிடு நான் தப்பா கேக்கல என்று பதில் அளித்துள்ளார் அந்த உரையாடல் அத்துடன் முடிகிறது.
கடந்தாண்டு நடந்த இந்த உரையாடலை அப்போதே வெளியாடாமல் தற்போது ஐயப்பன் ராமசாமி ஸ்டிங் வீடியோவில் சிக்கியுள்ளதால் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐயப்பன் ராமசாமியால் எந்த பெண்ணாவது இப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்த நேரம் வந்துவிட்டதாக பியூஷ் மானுஷ் குறிப்பிட்டுள்ளார்.