மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நாளை மறுநாள் (March 20) ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அரங்கில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை, வியூக ரீதியான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க இருப்பதாகவும், முக்கிய இருதரப்பு ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புடினும், ஷி-யும் கையெழுத்திட உள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.