உத்தவ் தாக்கரே – ரஜினி திடீர் சந்திப்பு| Uddhav Thackeray – Rajini Sudden Meeting

மும்பை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சற்று ஓய்வில் உள்ள ரஜினி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார். நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பான போட்டோவை ஆதித்யா தாக்கரே தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இருவரும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்கிறார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.