உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்தால் தானியங்களை பெறும் வகையில் தானிய ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
24 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே வாரணாசி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் “அனஜ் ஏடிஎம்” என்ற பெயரில் இவ்வகை தானிய ஏடிஎம்கள் உள்ளன.
அனஜ் ஏடிஎம்மில் 2 கொள்கலன்களில் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு நிமிடத்தில் 7 கிலோ தானியத்தை இந்த இயந்திரங்கள் வழங்கும். ரேஷன் கடைகளில் எடை, அளவு ஆகியவற்றில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.