சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள செட்டி ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள், நீச்சல் தெரியாததன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
படமிஞ்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் பள்ளி விடுமுறை தினமான இன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயதான மகேந்த், 5 வயதான சந்தோஷ், 10 வயதான மீனாட்சி ஆகியோர் குளிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிறுவன் சந்தோஸ் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை மகேந்த் காப்பாற்ற முயன்றபோது, அவனும் மூழ்கியுள்ளான்.
இதை கண்டு 2 பேரையும் சிறுமி மீனாட்சி காப்பாற்ற முயற்சிக்கவே, 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.