ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ரயில்வே அளித்த சிறப்பு சலுவை
திரைபடத்துறையின் அடிப்படை தொழிலாளிகளான லைட்மேன்கள் நலநிதிக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி நாளை (19ம் தேதி) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 11.30 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் வீடு திரும்ப வசதியாக சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரெயில்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக இயங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது வழக்கமாக 11 மணியுடன் நிறுத்தப்பட்டு விடும் ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 19ம் தேதி இரவு 7 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவைகள் அன்று மட்டும் நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க மெட்ரோ ரயில்களில் வரும் பயணிகள், பயணச்சீட்டு, பயண அட்டைகளை பயன்படுத்தி 20 சதவிகித சலுகை பெற்று' கொள்ளலாம். மெட்ரோவின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.