சென்னை: சென்னையில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அனுராக் சிங் தாகூரை உதயநிதி சந்தித்தார். விளையாட்டு பல்கலை.யில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் சிங் தாகூர் சென்னை வந்துள்ளார்.